IT情報ならキーマンズネット

製品 新着情報

OpenStandiaソリューション/シングルサインオン (野村総合研究所)

WebFOCUS (アシスト)

IT-Guardians (コニカミノルタビジネスソリューションズ)

ExchangeUSEワークフロー (富士電機システムズ)

SPAM WATCHER (アンペール)

ドキュメントマスター(Document Master) (エヌ・ティ・エル)

ITカテゴリ関連情報

基幹システム

情報系システム

ネットワーク

運用管理

サーバ・ストレージ

セキュリティ

PC・モバイル

OS

WEB構築

開発

OA・周辺機器


ブログで読み解くIT用語辞典


最新キーワード解説

 

ノウハウ解説

 

IT製品入門

தொடர்பாடல்

1/10

, the free encyclopedia தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடு

தொடர்பாடல் (communication) என்பது ஒரிடத்தில் இருந்து இன்னொரு மூலத்திற்கு தகவலைக் கடத்துதலாகும். இது பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது.

பொருளடக்கம்

[தொகு] மனிதனும் தொடர்பாடலும்

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.

[தொகு] பண்டைய தொடர்பாடல் முறைகள்

தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.

[தொகு] மொழிகளின் உருவாக்கம்

பின்னைய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கியது. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.

[தொகு] இன்றைய தொடர்பாடல்

இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாக இணையத்தை பயன் படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து விட்டது எனலாம்.

[தொகு] தொடர்பாடலில் உள்ள தடைகள்

பின் வரும் காரணிகள் மனித தொடர்பாடலில் பாதிப்பை ஏற்படுத்தவல்லன.

  • மொழி தெரியாமை
  • உள்ளடக்கத்தை தெளிவாகப் புரியாமை
  • வேண்டும் என்று தவறான தகவலைப் பரப்பல்
  • கவனத்தை திசை திருப்பும் காரணிகள்
  • நேரம் போதாமை
  • பெளதீகவியல் காரணிகள்
  • மருத்துவ ரீதியான காரணிகள்
  • நம்பிக்கைகள்
  • உணர்வுகள்

[தொகு] தொடர்பாடலின் நோக்கம்

பொதுவாக பின்வரும் காரணங்களே தொடர்பாடல் நடைபெறுவதை ஊக்குவிக்கின்றன.

  • எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ள
  • திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள
  • மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த
  • பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்த

[தொகு] தொடர்பாடல் நடைபெறும் வழிகள்

பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.

  1. ஒலி -–பேச்சு, ஒலிகளைப் பயன்படுத்தல்
  2. காட்சி - படங்கள், குறியீடுகள், நிறங்கள்

[தொகு] தொடர்பாடலின் கூறுகள்

தொடர்பாடல்

தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்

  1. அனுப்புனர்
  2. ஊடகம்
  3. பெறுனர்

உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளலாம். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தை காவிச்செல்லும் தபால் சேவை ஊடகம். கடிதத்தை பெறுவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியை புரிந்து கொள்ளாவிடின் முழு தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியைக் குளப்பும் தன்மைகொண்டவை, எ-கா: சிற்றலை வரிசை ஒலிபரப்புகள் காலநிலை மாற்றங்களால் குளம்புகின்றன.

[தொகு] வினைத்திறனான தொடர்பாளர்

பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும்.

எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் (Assertive) சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.


 1  2   3   4   5   6   7   8   9   10 

[記事全文]